மிரட்டலாக உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’... பிரம்மாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழா !
‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்டம் ‘சந்திரமுகி’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 18 வருடங்களுக்கு பிறகு உருவாகும் இந்த படத்தை பி.வாசுவே இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடித்துள்ளார். சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட தயாரித்து வரும் இந்த படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்திற்கான இசை வெளியீட்டிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
#Moruniye from #Chandramukhi2 🗝️ releasing tomorrow at 5PM ! 😎💃
— Sony Music South (@SonyMusicSouth) August 21, 2023
Stay tuned for this @mmkeeravaani musical 🎻
✍🏻🎶 @Lyricist_Vivek
🎤 #SPCharan @HarikaNarayan
💃🏻 @iambababaskar#Chandramukhi2 🗝️ #PVasu @offl_Lawrence @KanganaTeam @gkmtamilkumaran @LycaProductions pic.twitter.com/vv0TJcXJ2U