‘ஆர்.ஆர்.ஆர்’ பாடல் போன்றே உருவாகியுள்ள ‘மொருநீ’ பாடல்.. ‘சந்திரமுகி 2’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு !

Chandramukhi 2

‘சந்திரமுகி 2’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது ‘சந்திரமுகி 2’. சூப்பர் ஸ்டார் நடித்த கெட்டப்பிலேயே நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Chandramukhi 2

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கியுள்ள இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதலை தான் இந்த படத்தின் கதைக்களம். 

Chandramukhi 2

தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் வரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘மொருநீ’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பாடல் வரவேற்பை பெற்ற நிலையில் மற்றொருபுறம் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பாடல் போன்று இருப்பதாக கலாய்த்து வருகின்றனர். 

 

Share this story