இறுதிக்கட்டத்தை எட்டிய ‘சந்திரமுகி 2’.. புதிய அப்டேட்

chandramukhi 2

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது ‘சந்திரமுகி 2’. சூப்பர் ஸ்டார் நடித்த கெட்டப்பிலேயே நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்து வருகிறார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

chandramukhi 2

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கி வருகிறார். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதலை தான் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு பலகட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை முதல் மைசூர் அரண்மனையில் தொடங்கவுள்ளது. இதில் க்ளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் படக்குழுவினர் படமாக்கப்பட உள்ளனர். இதற்கிடையே இப்படத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Share this story