லகலக லகலக... மிரட்ட வரும் சந்திரமுகி.. டிரெய்லர் குறித்து அறிவிப்பு !

Chandramukhi2

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சூப்பர் ரஜினிகாந்தின் ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. மீண்டும் பி.வாசுவே இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். வேட்டையன் மற்றும் சந்திரமுகி இடையேயான மோதல் இந்த படத்தின் கதையாக உள்ளது. அதனால் வேட்டையனாக ராகவா லாரன்ஸும், சந்திரமுகியாக கங்கனாவும் நடித்துள்ளனர். 

Chandramukhi2

மேலும் இந்த படத்தில் வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுபெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். லைக்கா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. 

Chandramukhi2

இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி மாலை 3 மணிக்கு பிரபல மால் ஒன்றில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 


 


 

Share this story