டப்பிங்கில் அசத்தும் வடிவேலு... ‘சந்திரமுகி 2’ படத்தின் புதிய அப்டேட்

‘சந்திரமுகி 2’ படத்தின் டப்பிங்கை நடிகர் வடிவேலு தொடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி 2'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பல கட்டமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்ற தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கை நடிகர் வடிவேலு இன்று தொடங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
'Vaigai Puyal' #Vadivelu is back to his comedy zone! Check out his Dubbing atrocities 🎙️with Chandramukhi at the studio. #Chandramukhi2 🗝️ #PVasu @offl_Lawrence @gkmtamilkumaran @LycaProductions #Subaskaran pic.twitter.com/ztECpb7A98
— Only Kollywood (@OnlyKollywood) August 16, 2023