சந்திரமுகி 2: ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்கிய ராகவா லாரன்ஸ்
சந்திரமுகி 2 திரைப்படம் நாளை மறுநாள் வௌியாவதை முன்னிட்டு, நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் நாயகியாக நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்திலிருந்து பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில், நாளை மறுநாள் சந்திரமுகி 2 திரைப்படம் வௌியாக உள்ள நிலையில், படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.