சந்திரமுகி - 2 வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?

சந்திரமுகி - 2 வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?

சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியீட்டுத் தேதியை மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் நட்சத்திர நடிகரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இத்திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. 'சந்திரமுகி 2' படத்தின் வெளியீட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில், சந்திரமுகி வேடத்தில் நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தின் தோற்றம், கதாபாத்திரம் ஆகியவை குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகரித்திருக்கிறது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று இப்படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்க படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 
 

Share this story