‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்.

photo

‘சந்திரமுகி2’ படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வந்துள்ளது. அதற்கான அறிவிப்பு  போஸ்டர் வெளியாகியுள்ளது.

photo

கடந்த 2005ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாசர், பிரபு, வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சந்திரமுகி’.  வாசூலை வாரி குவித்த இந்த படத்தின் காமெடி வசனங்கள், பாடல்கள் என அனைத்துமே பிளாக் பஸ்டர் ஹிட்டானது.  முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

லைக்கா நிறுவனம் தயரிக்கும் இந்த படத்தில் வேட்டையனாக ராகவாலாரன்ஸும், சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ராதிகா சரத்குமார், வடிவேலு, லெட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் முதல் பாடலான  ‘ஸ்வகத்தாஞ்சலி’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து கங்கனா நடனமாடுவது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Share this story