‘சந்திரமுகி 2’ படத்தின் டிரைலர் வெளியீடு.

photo

ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகியுள்ளது.

photo

கடந்த 2005ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாசர், பிரபு, வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சந்திரமுகி’.  வாசூலை வாரி குவித்த இந்த படத்தின் காமெடி வசனங்கள், பாடல்கள் என அனைத்துமே பிளாக் பஸ்டர் ஹிட்டானது.  முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

photo

லைக்கா நிறுவனம் தயரிக்கும் இந்த படத்தில் வேட்டையனாக ராகவாலாரன்ஸும், சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ராதிகா சரத்குமார், வடிவேலு, லெட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வேட்டைய ராஜா அரண்மனையை சுற்றியே கதை இருக்கும் என அனைவருக்கும் தெரியும். இருந்தாலும்  ரசிகர்களின் எதிர்பார்பை முதல் பாகம் பூர்த்தி செய்தது போல இரண்டாம் பாகம் பூர்த்தி செய்யுமா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

 

Share this story