சந்திரமுகியாக மாறிய கங்கனா... புதிய அப்டேட்

chandramuki 2

'சந்திரமுகி 2' படத்திற்காக சந்திரமுகியாக மேக்கப் போடும் புகைப்படங்களை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார். 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது ‘சந்திரமுகி 2’. முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு உருவாகி வெளியான 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது. 18-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி வரும் இப்படத்தை பி வாசு தான் இயக்கி வருகிறார். நடிகர் ராகவா லாரன்ஸ், சூப்பர் ரஜினியின் ஸ்டைலிலேயே நடித்து வருகிறார்.

chandramuki 2

இந்த படத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதலை தான் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்து வருகிறார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். 

chandramuki 2

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் சந்திரமுகியாக மாறும் கெட்டப்பிற்கு மேக்கப் போடும் புகைப்படங்களை நடிகை கங்கனா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 


 

Share this story