ஸ்பிலிட் சூசை - மெமரி தாஸ் - சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் கதாப்பாத்திரங்கள்

Chennai city gangsters

சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர். கடைசியாக ரணம் அறம் தவறேல் திரைப்படத்தில் நடித்து இருந்தார். விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தில் வைபவின் கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்பொழுது படத்தில் நடித்த மொட்ட ராஜேந்திரன் மற்றும் ஆனந்த் ராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். ராஜேந்திரன் மெமரி தாஸ் என்ற கதாப்பாத்திரத்திலும் ஆனந்தராஜ் ஸ்பிலிட் சூசை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாப்பாத்திரத்தின் பெயர் மிகவும் வித்தியாசமாக நகைச்சுவையாகவும் இருக்கிறது. திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Share this story