சென்னையில் மேலும் 2 பழமையான தியேட்டர்கள் மூடல்..?

சென்னையில் உள்ள மேலும் 2 பழமையான தியேட்டர்கள் மூடபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் உதயம், சந்திரன், சூரியன் என மூன்று திரைகளுடன் செயல்பட்டது. கார்பரேட் நிறுவனங்களால் மல்டிப்ளெக்ஸ் திரைகள் அறிமுகமாவதற்கு முன்னரே சென்னையில் 4 திரைகளுடன் சினிமா ரசிகர்களின் கோட்டையாக விளங்கியது உதயம் திரையரங்கம். சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் உதயம், சந்திரன், சூரியன் என மூன்று திரைகளுடன் செயல்பட்டது.
ஒவ்வொரு திரையிலும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் இந்தத் திரையரங்கம் இருந்து வந்தது. இருப்பினும் காலத்திற்கேற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரத் தவறியதால் உதயம் தியேட்டர் அண்மையில் மூடப்பட்டது.
உதயம் திரையரங்கத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில் திரையரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது. அதேபோல், தற்போது, சென்னையில் உள்ள மேலும் இரு திரையரங்குகள் மூடப்பட உள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம். திரையரங்கமும், பெரம்பூரில் உள்ள ஸ்ரீபிருந்தா திரையரங்கமும் மூடப்படுவதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தண்டையார்பேட்டையில் பல வருடங்களாக செயல்பட்டு வந்த எம்.எம். திரையரங்கம் மெட்ரோ ரெயில் பணிகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட எம்.எம். திரையரங்கம் தொடர்ந்து நட்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.
பெரம்பூரில் 1985ஆம் ஆண்டு ஸ்ரீபிருந்தா தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அதன்பின்பு இந்த தியேட்டரை ரசிகர்கள் அன்போடு ரஜினி தியேட்டர் என்றே அழைத்தார்கள். இந்த தியேட்டரில் மாப்பிள்ளை, பாண்டியன், அண்ணாமலை போன்ற பல ரஜினி திரைப்படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடின.
சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் ஒற்றை திரை கொண்டு செயல்பட்டு வரும் திரையரங்குகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன.
ஒருகாலத்தல் சென்னையின் அடையாளமாக விளங்கிய தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.