சாதிய வன்கொடுமைகளை தோலூரிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’... சேரன் படத்தின் ரிலீஸ் தேதி !

Tamilkudimagan

சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

வித்தியாசமான கதைக்களம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சேரன். பன்முக திறமைக் கொண்ட அவர், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. 

Tamilkudimagan

இந்த படத்தில் ஸ்ரீபிரியங்கா, லால், தீபா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை லஷ்மி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

சாதிய வன்கொடுமைகள் குறித்து பேசும் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story