ரீ-ரிலீசாகும் சேரனின் ‘ஆட்டோகிராஃப்’...!

cheran

சேரன் இயக்கி நடித்த ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மீண்டும் மறுவெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

2004-ம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த படம் ‘ஆட்டோகிராஃப்’. இப்படத்தில் கோபிகா, சினேகா, மல்லிகா, ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக ‘ஆட்டோகிராஃப்’ இருந்து வருகிறது.cheran

தேசிய விருது, தமிழக அரசு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றது ‘ஆட்டோகிராஃப்’. மேலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இப்படத்தினை மறுவெளியீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறார் சேரன். இது தொடர்பாக சேரன், “மீண்டும் ‘ஆட்டோகிராஃப்’ படத்தினைக் கொண்டாட தயாராகுங்கள். 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகவுள்ளது” என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this story