‘செவ்வாய்கிழமை’ படத்தின் டீசர் இதோ……..
ஃபஸ்ட்லுக் போஸ்டர் மூலமாக சர்சையில் சிக்கிய ‘செவ்வாய்கிழமை’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் தயாராகிவரும் திரைப்படம் ‘மங்கள்வாரம்’. தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தமிழில் ‘செவ்வாய்கிழமை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அதற்கு காரணம் படத்தின் நாயகியான பாயல் ராஜ்புத் அந்த போஸ்டரில் நிர்வாணமாக இருந்ததுதான். தொடர்ந்து கடும் விமர்சனங்களை பெற்ற இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
டீசரில் ஊர் மக்கள் முழுவதும் வானத்தில் எதையோபார்த்து வாயை பிளந்து நிற்கின்றனர், பற்றி எரியும் காடு, படுக்கையறை காட்சிகள் என அமானுஷ்யம் நிறைந்த படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை பாயல் ராஜ்புத்துடன், நந்தித்தா சுவேதா, திவ்யா பிள்ளை, அஜய் கோஷ் என பலரும் நடித்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரித்துள்ளது.