லக்கி பாஸ்கர் படம் பார்த்து விடுதியில் இருந்து தப்பியோடிய சிறுவர்கள்
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த தீபாவளின்று(31.11.2024) வெளியான படம் லக்கி பாஸ்கர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்படத்தில் நடுத்தர குடும்பத்தில் இருக்கும் துல்கர் சல்மான் ஸ்கேம் செய்து ஒரு கட்டத்தில் கார், வீடு என பெரிய பணக்காரராக மாறியிருப்பார். இந்த நிலையில் துல்கர் சல்மான் போலவே கார், வீடு வாங்கி விட்டு திரும்புவதாக நான்கு பள்ளி மாணவர்கள், காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 9ம் வகுப்பு படிக்கும் 4 பள்ளி மாணவர்கள் லக்கி பாஸ்கர் படத்தை பார்த்து விட்டு, அதே போல் பணக்காரர்களாக வருவதாக நண்பர்களிடம் சொல்லிவிட்டு விடுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்கள். இந்த தகவல் அந்த மாணவர்களின் பெற்றோருக்கு தெரிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து மானவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.