‘வைரமுத்து’வை அவரது பாணியிலேயே வெளுத்து வாங்கிய ‘சின்மயி’.

photo

கோலிவுட்டில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் வைரமுத்து, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தனது பாணியில் கவிதை மூலமாக வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார்.


வைரமுத்து வெளியிட்ட வாழ்த்து பதிவில்,

மாலையும் நகையும்

கேட்கவில்லை பெண்;

மதித்தல் கேட்கிறாள்

 

வீடும் வாசலும்

விரும்பவில்லை பெண்;

கல்வி கேட்கிறாள்

 

ஆடம்பரம் அங்கீகாரம்

ஆசைப்படவில்லை பெண்;

நம்பிக்கை கேட்கிறாள்

கொடுத்துப் பாருங்கள்;

அவளே பாதுகாப்பாள்

ஆண்களையும்

உலக மகளிர் திருநாள் வாழ்த்து என குறிப்பிட்டு இருந்தார்.


 இந்த பதிவிற்கு பதிலடியாக, சின்மயி  “அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்க்கிறாள்.

பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூறு கேட்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள்.

photo

இவர் எப்படி பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சுதந்திரம் குறித்தும் பேசுகிறார். என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லைஎன காட்டமாக தனது பதிலை கவிதை மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு முன் வைரமுத்து மீது மீடூ புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story