செ*** குறித்து பாடமெடுத்த 'பாடகி சின்மயி' – புரிதல் மிக அவசியம், கவனம் பெறும் வீடியோ.

photo

பாடகி சின்மயி முதல் முறை உடலுறவு கொள்ளும்போது, பெண்ணின் கன்னித்தன்மை, கண்டறிய காலம் காலமாக நம்பப்படும் சில விஷயங்கள் குறித்தும்,  உடைத்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கவனம் பெற்றுள்ளது.

photo

பிரபல பாடகி சின்மயி பல முக்கிய விஷயங்கள் குறித்து தனது கருத்தை சமூகவலைதளத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் காலம் காலமாக பெண்களின் கன்னித்தன்மை, அவர்களின் முதல் உடலுறவில் உதிரப்போக்கு ஏற்படுவதன் மூலமாக உறுதிசெய்யப்படும் ஒரு நம்பிக்கை குறித்து, விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.

photo

அதில் அவர் கூறியதாவது, திருமணம் என்னும் உன்னத உறவை மேலும் வலுப்படுத்துவது, தாம்பத்தியம் முறை உடலுறவில் ஆண் - பெண் ஈடுபடும் போது, அந்த பெண்ணிற்கு ரத்த போக்கு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது, அப்படி ரத்த போக்கு இல்லை என்றால், அவள் கன்னி தன்மையோடு இல்லை என கூறுகிறார்கள்.

அதேபோல பெண்ணின் பிறப்புறுப்பு   டைட்டாக இருக்க வேண்டும் என் நினைக்கிறார்கள்.  இது போன்று நம்பப்படும் சில கூற்றுகளால் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. என்னதான் இது காலம் காலமாக கூறப்பட்டு வந்தாலும் இது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது; முதல் முறை உடலுறவின் போது சிலருக்கு மட்டுமே உதிரப்போக்கு ஏற்படும், அதுமட்டுமல்லாமல் பிறப்புறுப்பில் திரவப்போக்கு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு அந்த இடம் டைட்டாக இல்லாமல்  இருக்கும்.  இதனை பிரிந்து கொள்ளுங்கள். மேலும் செக்ஸ் குறித்து ஏதேனும் சந்தேகம் வந்தால், ஆபாச படங்களை பார்பதை தவிர்த்து விட்ட, உறிய மருத்துவரை அணுகுங்கள். செக்ஸ் குறித்த கல்வி மிக முக்கியம். உள்ளிட்ட விஷயங்களை அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

Share this story