சொந்தபந்தங்களுடன் சங்கராத்தி கொண்டாடிய சிரஞ்சீவி

சொந்தபந்தங்களுடன் சங்கராத்தி கொண்டாடிய சிரஞ்சீவி

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘போலா சங்கர்’. இந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காகும். அண்ணன் - தங்கை சென்டிமென்ட்டை வைத்து தமிழில் உருவாகி வரவேற்பை இந்த படம் தெலுங்கிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மெஹர் ரமேஷ் இயக்கிய திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. சிரஞ்சீவி நடிக்கும் 156 வது படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை பிம்பிசாரா படத்தின் இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சொந்தபந்தங்களுடன் சங்கராத்தி கொண்டாடிய சிரஞ்சீவி

இந்நிலையில், தெலுங்கு தேசத்தில் மகா சங்கராத்தியாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்று சிரஞ்சீவி குடும்பத்தினர் அனைவரும் அவர்களின் பூர்வீக வீட்டில் ஒன்று கூடி வழிபட்டுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story