எம்ஜிஆர் சொன்ன வார்த்தையால் திரைவாழ்வை மாற்றிய சிரஞ்சீவி

எம்ஜிஆர் சொன்ன வார்த்தையால் திரைவாழ்வை மாற்றிய சிரஞ்சீவி

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘போலா சங்கர்’. இந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காகும். அண்ணன் - தங்கை சென்டிமென்ட்டை வைத்து தமிழில் உருவாகி வரவேற்பை இந்த படம் தெலுங்கிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மெஹர் ரமேஷ் இயக்கிய திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. சிரஞ்சீவி நடிக்கும் 156 வது படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை பிம்பிசாரா படத்தின் இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

எம்ஜிஆர் சொன்ன வார்த்தையால் திரைவாழ்வை மாற்றிய சிரஞ்சீவி

இந்நிலையில், எம்ஜிஆர் குறித்து சிரஞ்சீவி பேசியது தற்போது வைரலாகி வருகிறது. படத்தில் நான் நடிக்கும்போது முன்பு அதிகப்படியான டேக் எடுப்பேன் அப்போது பிலிம் வீணாகுவதாக தயாரிப்பாளர்கள் தெரிவிப்பர். அப்போது, ஒரு நாள் தன்னிடம் எம்ஜிஆர் அதிக டேக் எடுப்பது பார்ப்பவர்களுக்கு தெரியாது. அதனால், தங்களின் பெஸ்டை கொடுங்கள் என்றார். இது என் திரை வாழ்க்கையையே மாற்றியது என சிரஞ்சிவீ கூறியுள்ளார். 

Share this story