ஆந்திரா வெள்ளம் - ரூபாய் 1 கோடி நிவாரணம் வழங்கிய சிரஞ்சீவி & ராம் சரண்
1728811519000

கடந்த மாதம் ஆந்திரா மாநிலத்தில் கடும் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டது அதற்கு தானமாக பல மாநில திரைப்பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் ஆந்திரா முதலமைச்சர் வெள்ள நிவாரணம் நிதிக்கு பணம் கொடுத்து உதவினர். ஆந்திர அரசு வெள்ள நிவாரண பணிகளை துரிதமாகவும் தீவிரமாகவும் மேற்கொண்டனர். ஆனாலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடி கொடுத்தார். ராம் சரண் சார்பில் 1 கோடி ரூபயையும் நிவாரணத்திற்கு வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்து சந்திரபாபு நாயுடு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் " சிரஞ்சீவி காரு எப்பவும் மனித நேயம் மிக்க செயல்களில் அதிகம் ஈடுபடுபவர். நீங்கள் கொடுத்த நிதியுதவிக்கு மிக்க நன்றி. இந்த உதவி வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என கூறியுள்ளார்.அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஷ்வம்பரா படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.