பிலிம் ஃபேர் விருதுகளை குவித்த சித்தார்த்தின் `சித்தா'
நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் விமர்சனம் ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் உச்சத்தை தொட்டது.
படத்தில் இடம் பெற்ற கண்கள் ஏதோ மற்றும் சந்தோஷ் நாரயணன் பாடிய உனக்கு தான் போன்ற பாடல் மிகப் பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டது. நேற்று 69 ஆம் ஆண்டு தென் சோபா பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைப்பெற்றது. அதில் தென்னிந்திய நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர். சித்தா திரைப்படம் மொத்தம் 7 பில்ம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர்- சித்தார்த் , சிறந்த நடிகை- நிமிஷா சஜயன், சிறந்த குணச்சித்திர நடிகை - அஞ்சலி நாயர், சிறந்த பின்னணி பாடகி - கார்த்திகா வைத்தியநாதன் , சிறந்த இசை - திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாரயணன், சிறந்த இயக்குனர் - எஸ்.யூ அருண் குமார் இதனால் படக்குழுழுவினர் மிகவும் மகிழ்ச்சி யுடன் இருக்கின்றனர். பிலிம் ஃபேர் விருதுடன் சித்தார்த் இருக்கும் அவரது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் படக்குழுவினருக்கு பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.