‘சித்தா’ பட இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட் – மாஸ் ஹீரோவை இயக்கும் வாய்ப்பு!

photo

சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரவேற்பை பெற்ற படம் ‘சித்தா’. இந்த நிலையில் படத்தை இயக்கிய  எஸ்.யு அருண்குமாருக்கு நடிகர் சியான் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

photo

சியான் விக்ரம் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்டரில் சியானின் தோற்றத்தை பார்த்ததிலிருந்து ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகமானது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடந்து வரும் நிலையில் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

இந்த நிலையில் நடிகர் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு ‘சித்தா’ பட இயக்குநருக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை விக்ரமின் இருமுகன் படத்தை தயாரித்த சிபு தமின்ஸ் இயக்க உள்ளாராம். விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Share this story