சித்தார்த்தின் ‘சித்தா’ பட வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

photo

நடிகர் சித்தார்த் நடிப்பில் திரைக்கு வந்த  ‘சித்தா’ படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

photo

நடிகர் சித்தார்த் நடித்து தயாரித்துள்ள படம் ‘சித்தா’ இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்கலை இயக்கிய சு. அருண்குமார் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான இந்த படம் நான்கு நாட்களில்  உலக அளவில் ரூ.11.5 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இந்த அளவு வசூலித்துள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Share this story