நீரில் மூழ்கி இறந்த மகளுக்கு கனத்த இதயத்துடன் வாழ்த்து சொன்ன சித்ரா
1702982066609
சின்னக்குயில் சித்ரா என்று அன்பால் அழைக்கப்படும் கே.எஸ்.சித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 25,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். பாடகி சித்ரா-விஜயசங்கர் தம்பதிக்கு பிறந்த ஒரே மகளான நந்தனா ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 2011ம் ஆண்டு துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.மகளின் பிரிவால் மிகவும் வருந்திய சித்ரா, அவரது நினைவாக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவரது மகள் நந்தனாவின் பிறந்த நாளை அடுத்து சித்ரா தனது சமூக வலைத்தளத்தில்,இதயத்தில் நீ ஒரு மிகப்பெரிய வடுவை ஏற்படுத்தி சென்று விட்டாய், ஒவ்வொரு நாளும் உன்னை நான் மிஸ் செய்கிறேன். ஹாப்பி பர்த்டே நந்தனா என்று குறிப்பிட்டுள்ளார்