மாஸ் லுக்கில் ‘சியான் விக்ரம்’ வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்திற்காக விக்ரம் முடிவளர்த்து புது கெட்டப்பில் வலம்வந்த நிலையில் தற்போது அதை மாற்று நியூ லுக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்தவர் விக்ரம். தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்தாலும் இவர் பிரபலமானது தமிழில் பாலா இயக்கிய ‘சேது’ படத்தில்தான். அந்த படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. காசி, ஜெமினி, சாமி, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்தார். இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் மூன்று தோற்றத்தில் இவர் நடித்த ‘அந்நியன்’ இவரை மீண்டும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
அடுத்தடுத்து பல மாஸ் ஹிட் படங்களில் நடித்த விக்ரம், ஒரு ஒரு படத்திற்கும் தனது முழு உழைப்பையும் கொடுத்து வித்தியாசமான நடிப்பை காட்டியிருப்பார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த தமிழர்களை மைய்யமாக வைத்து உருவாகிவரும் தங்கலான் படத்திற்காக முடி வளர்த்து இதுவரை நாம் பார்த்திராத புது விக்ரமாக இருந்தார். தற்போது அந்த லுக்கை மாற்றி வேறு நியூ லுக்கில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.