மிரட்டும் 'சியான் விக்ரம்62' அறிமுக வீடியோ!
1698547516107

சியான் விக்ரமின் 62வது படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி அனைவரையும் அசர வைத்துள்ளது.
சியான் விக்ரம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் வரும் ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் அடுத்து அவரது 62வது படம் குறித்த வீடியோ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் குமார் இயக்க உள்ளார். ஜி.வி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்க உள்ளார். அந்த வீடியோவில் திருத்தணி காவல் நிலையம் ஒன்றில் புகுந்து விக்ரம் இருவரை அடித்து அங்குள்ள பொருட்களை உடைக்கிறார். தொடர்ந்து கதை நகர்கிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் அறிமுக வீடியோவே அசத்தலாக இருப்பதாக கூறிவருகின்றனர்.