சட்னி சாம்பார் வெப் தொடரின் டீசர் வெளியானது..!!

1

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகி கால் பதித்து இன்று சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு . தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது ஏரளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது இவரது நடிப்பில் புதிய தமிழ் வெப் தொடர் ஒன்று உருவாகி வருகிறது. சட்னி சாம்பார் என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை ராதாமோகன் இயக்கி வருகிறார்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த தொடரில் யோகிபாபுவுடன் இணைந்து வாணிபோஜன், நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

இந்நிலையில் இந்த வெப் தொடர் என்ன மாதிரியான கதை என்பதை பார்க்க ஆவலாக இருந்தவர்களுக்கு தற்போது இந்த வெப் தொடரின் டீசர் வெளியாகி உள்ளது .

Share this story