தலைவர் 171 படத்தில் 'பாலிவுட் பாட்ஷா'!

photo

தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில் அந்த படம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

photo

அதாவது நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்  அவர் நடிக்கும் லால்சலாம் படத்தின் கிளின்ஸ், மற்றும் 170 படத்தின் தலைப்பு ‘வேட்டையன்’ என படக்குழு அறிவித்தனர். இந்த நிலையில் தலைவரின் அடுத்த படமான 171வது படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்க உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் , படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவர் மட்டுமல்லாமல் சினி உலகில் உள்ள ஓவ்வொரு மொழி முன்னணி நடிகர்களும் இணையப்போவதாக தகவல் வந்துள்ளது. அதன்முறையே தெலுங்கில் ராம்சரண், மலையாளத்தில் பிருத்விராஜ், கன்னடத்தில் கிச்சா சுதீப் நடிக்க உள்ளர்களாம். இந்தப்படத்தின் படபிடிப்பு வரும் ஏப்ரலில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

Share this story