சிட்டாடல் வெப் தொடர்: பிரியங்கா சோப்ராவுடன் சமந்தா சந்திப்பு

samantha
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தா விவாகரத்து, மயோசிடிஸ் நோய் பாதிப்பு போன்ற பிரச்சினைகளால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து விட்டு இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் இந்தி பதிப்பில் சமந்தா, வருண் தவான் நடித்து இருக்கிறார்கள். ராஜ் அண்ட் டிகே இயக்கி உள்ளனர். சிட்டாடல் தொடர் விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கும் நிலையில் லண்டனில் இந்த தொடரின் சிறப்பு காட்சி திரையிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரியங்கா சோப்ரா, சமந்தா ஆகியோர் பங்கேற்று ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

Share this story