சிட்டிசன் பட இயக்குனர் 15 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியுள்ள புதிய படம்!

saravanan

இயக்குனர் சரவணன் சுப்பையா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படம் சிட்டிசன். இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. சிட்டிசன் என்ற சூப்பர் ஹிட்  படத்தைக் கொடுத்த இயக்குனர் சரவணன் சுப்பையா, அதன் பிறகு ஷாம், சினேகா நடித்த ஏபிசிடி படத்தை இயக்கினார். பின்னர் அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. தற்போது 15 ஆண்டுகளுக்குப் பின் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். 

meendum

’மீண்டும்’ என்று தலைப்பிடப்பட்ட அந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கதிரவன், சரவண சுப்பையா, அனைகா, சுப்பிரமணிய சிவா, யார் கண்ணன், துரை சுதாகர், உள்பட பலர் நடித்துள்ளனர்.

நரேன் பாலகுமார் இசையில், வைரமுத்து பாடல் வரிகளில், ஸ்ரீனிவாசன் தெய்வாம்சம் ஒளிப்பதிவில், ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. படம் த்ரில்லர் ஜேர்னரில் உருவாகியுள்ளது. 

Share this story