ஜிகர்தண்டாவைக் காணும் ஆசையில் கிளிண்ட் ஈஸ்ட்வுட்... உற்சாகத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

ஜிகர்தண்டாவைக் காணும் ஆசையில் கிளிண்ட் ஈஸ்ட்வுட்...  உற்சாகத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யா நடிப்பில் வெளியான இந்த படத்தில் இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் உலக அளவில் இதுவரை ரூ.70  கோடிவரை வசூலித்தது. அண்மையில் இத்திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சீசரான ராகவா, பிரபல ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தனக்கு கொடுத்ததாக கூறி பழைய கேமரா ஒன்றை காட்டியிருப்பார். இதைக் கூறும் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டே நடித்தது போல்விஎஃப்எக்ஸ் செய்திருந்தனர்.

ஜிகர்தண்டாவைக் காணும் ஆசையில் கிளிண்ட் ஈஸ்ட்வுட்...  உற்சாகத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

கிளிண்ட் ஜிகர்தண்டா படத்தை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். இதை விரைவில் பார்க்க உள்ளார் என அவரது கணக்கில் இருந்து பதிவிடப்பட்டுள்ளது. இதனால், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உள்பட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

Share this story