‘அமரன்’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

amaran

‘அமரன்’ படத்தின் சிறப்பு திரையிடலை பார்த்து படக்குழுவினரை பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘அமரன்’ படத்தினை சோனி நிறுவனம், கமல் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அனைத்து மொழிகளிலும் வெளியாவதால் படக்குழுவினர் அனைத்து இடங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.


 
இந்த நிலையில், ‘அமரன்’ படத்தின் சிறப்பு திரையிடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (அக்.30) படக்குழுவினருடன் சேர்ந்து பார்த்தார். இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

படத்தைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷ், “அமரன் படக்குழுவையும், என்னுடைய இசையையும் பாராட்டிய எங்கள் முதல்வருக்கு நன்றி. இது எங்களுக்கு மிகப்பெரியது” என்று தெரிவித்துள்ளார்.


 

Share this story