மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி... சியான்63 பட அப்டேட் இதோ...

மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி... சியான்63 பட அப்டேட் இதோ...

பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது. நவம்பர் 1-ம் தேதி படத்தின் முன்னோட்டம் வெளியானது.இதையடுத்து, விக்ரம் நடிக்கும் 62-வது படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது. அருண்குமார் இந்த படத்தை இயக்குகிறார். 

மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி... சியான்63 பட அப்டேட் இதோ...

இந்நிலையில், விக்ரம் நடிக்கும் 63-வது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கோப்ரா கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. அஜய் ஞானமுத்து இந்த திரைப்படத்தை இயக்குகிறார். படத்தை எஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. 

Share this story