தனது அம்மா பிறந்தநாளை ஊட்டியில் கொண்டாடிய கோட் பட நடிகை..!

1

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மலையாள நடிகையான பார்வதி நாயர்.அதன் பிறகு கமல்ஹாசனின் மகளாக ’உத்தம வில்லன்’ படத்தில் மற்றும் சில தமிழ் படங்களிலும் நடித்த நிலையில் தற்போது அவர் விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் பார்வதி நாயர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அவர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் மொட்டை மாடி நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. இந்த பதிவில் பார்வதி நாயர் கூறியதாவது:

என்னுடைய அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இதைவிட சிறப்பாக கொண்டாட முடியாது என்றும், இந்த சுற்றுப்பயணம் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அளவில்லா சிரிப்பு, மறக்க முடியாத நினைவுகள், அனைத்தும் தன்னை கவர்ந்தது என்றும் எனது அம்மாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக வருகின்றன.

Share this story