சுந்தர் சி இயக்கத்தில் 'கஃபி வித் காதல்'... ஸ்னீக் பீக் வெளியீடு !

coffee with kadhal

சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள 'காஃபி வித் காதல்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. 

காமெடி திரைப்படங்கள் என்றாலே சுந்தர் சிதான். ஆனால் தற்போது காமெடியை குறைத்து முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதைக்களத்தில் சுந்தர் இயக்கியுள்ள திரைப்படம் ‘காபி வித் காதல்’. குஷ்பூவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. 

coffee with kadhal

இந்த படத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவர் கதாநாயகன்களாகவும், நடிகைகள் அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இதுதவிர விஜய் டிவி டிடி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். 

coffee with kadhal

இந்த படம் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜீவா காரசாரமாக பேசும் அந்த காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

Share this story