‘தளபதி 67’ படத்தில் பணிபுரிய அறிய வாய்ப்பு!.....அறிவித்த காவல் துறை ;ஆர்வம் காட்டிய இளைஞர்கள்….

photos

விஜய் லோகேஷ் கூட்டணியில் உருவாக இருக்கும்  ‘தளபதி 67’ படத்தில் பணிபுரிய ஒரு அறிய வாய்ப்பை அறிவித்திருந்தார் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.

photos

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதை பழக்கத்தை தடுக்கும் பொருட்டு தமிழக காவல் துறை தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல் துறை மற்றும் தனியார் நிறுவனம் ஒன்று சேர்ந்து குறும்படப் போட்டியை அறிவித்திருந்தனர்.

photos

போதை தடுப்பு விழிப்புணர்வுஎன்ற தலைப்பில் 3-5 நிமிடங்கள் வரையிலான குறும்படங்களை அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது . இந்த போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

photos

போட்டியில் வெற்றியாளருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவித்திருந்தார், இந்த போட்டியில் 182 குறும்படங்கள் போட்டியிட்டதாக  அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

photos

இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 10 குறும்படங்கள்  நவம்பர் 16-18 வரை நடைப்பெறும் “YUVA INDIA 2022” நிகழ்ச்சியில் திரையிடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 15,000 மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போட்டி நிச்சயம் இளைஞர்களை ஊக்கபடுத்தும் எனவும் இதனால் போதை பொருள் பயன்பாட்டின் அபாயம் பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் எனவும் கமிஷனர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியில் யார் வெற்றி பெற்று லோக்கேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனர்களாக மாற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story