படிப்பில் சாதித்து காட்டிய காமெடி நடிகர் ‘முத்து காளை’!....

photo

பிரபல காமெடி நடிகர் முத்து காளை இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

photo

ராஜபாளையத்தி பூர்வீகமாக கொண்ட முத்து காளை, சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தார். தொடர்ந்து சில படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும் பணியாற்றிய அவர், 1997ஆம் ஆண்டு  வெளியான பொன்மனம் படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அவரது உடல்மொழி, டயலாக் டெலிவரி மூலமாக காமெடி நடிகரானார். முன்னணி காமெடி நடிகர்கள் பலருடன் இவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் பலருக்கும் பிடித்த ஒன்று. குடிக்கு அடிமையான அவர் அதிலிருந்து மீண்டு தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

photo

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு பி.ஏ தமிழ் வரலாற்றில் படம் பெற்றார். அடுத்து 2019ஆம் ஆண்டு எம்.ஏ தமிழில் தேர்ச்சி பெற்றார். தற்போது இளங்கலை தமிழ் இலக்கிய தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று அசத்தியிள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  

Share this story