பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

photo

பிரபல காமெடி நடிகரான அர்ஜுனன் நந்தகுமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

photo

கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 படத்தின் மூலமாக அறிமுகமானர் நடிகர் அர்ஜுனன். இவர் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, அவியல், கப்பல், வாயை மூடி பேசவும் ,ஆதலால் காதல் செய்வீர், டிக்டிக்டிக், டார்லிங்2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இளன், இயல் என்ற ஒரு மகன் , மகள் உள்ளார். அவர்களும் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக வலம்வருகின்றனர். மகள் தளபதியின் லியோ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் மூன்றாவதாக இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

photo

இது குறித்து பதிவிட்டுள்ள அர்ஜுனன், தனது குழந்தையின் பாதத்தை போட்டு அவனின் பெயர் இமையன் என்பதையும் அறிவித்துள்ளார். தொடர்ந்து பலரும் தம்பதிக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Share this story