நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் முடிந்தது
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களுள் ஒருவர், ரெடின் கிங்க்ஸ்லி. இவர், 90களில் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். பின்னர், சென்னை மற்றும் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார். நெல்சனின் இயக்கத்தில் முதன் முதலாக வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்து மக்களுக்கு பரீச்சியமான முகமாக மாறினார். இதைடுத்து, நெல்சன் அடுத்தடுத்து இயக்கிய அனைத்து படங்களிலும் அவர் நடித்து வந்தார். டாக்டர் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அது மட்டுமன்றி, நெல்சனுக்கு நெருக்கமான நண்பர்களுள் இவரும் ஒருவர். “ஐய்ய..இப்போ என்ன அதுக்கு..” என இவர் கேட்கும் தோரணையும் சத்தமாக பேசும் தொனியும் பலருக்கும் பிடிக்கும். டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், 46 வயதான கிங்ஸ்லி தமிழ் சீரியல் நடிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்,. இவர் மாஸ்டர் படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்திருப்பார். இருவரின் திருமணப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.