கதாநாயகனாக கவனம் செலுத்தும் சதிஷ்... புதிய படத்தின் அறிவிப்பு !

sathish

 காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.‌

sathish

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் சதீஷ். முன்னணி நடிகர்களின்‌ திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்த சதீஷ், தற்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான 'நாய் சேகர்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 

sathish

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாவதாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி என்பவர் இயக்கயுள்ளார். இந்த படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கவுள்ளார். 

இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, விபிஆர் இசையமைக்கவுள்ளார். சித்தார்த் படத்தொகுப்பாளராகவும், ஜி துரைராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றவுள்ளனர். 

sathish

இந்நிலையில் இப்படத்தின் படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் ஆர்.ரவீந்திரன், லலித் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Share this story