ரஜினிகாந்துடன் இணையும் பிரபல காமெடி நடிகர் 'செந்தில்' – வெளியான அசத்தல் தகவல்.

photo

பிரபல காமெடி நடிகரான செந்தில், ரஜினி நடிக்க இருக்கும் திரைப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படைப்பாக தயாராகிவரும் திரைப்படம் ‘லால் சலாம்’ . இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ ரோலில் நடிக்க போவதாக தகவல் வெளிகியுள்ளது.  விளையாட்டு அரசியலை மைய்யமாக கொண்ட இந்த படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.   

photo

கடந்த மார்ச் 8ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு செஞ்சியில் தொடங்கி நடந்து வருகிறது.  தற்போதைய தகவல்படி இந்த படத்தில் பிரபல மூத்த காமெடி நடிகரான செந்தில் இணைய உள்ளது வெளியாகியுள்ளது. அவர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து திரையை பகிர்ந்துகொள்ள இருக்கிறாராம். தற்போது நடந்து வரும் முதல்கட்ட படப்பிடிப்பு 35நாட்கள் நடக்க இருக்கிறதாம். 

photo

ரஜினி, செந்தில் கூட்டணி என்றால் சட்டென நினைவிற்கு வருவது 'படையப்பா' படத்தில் வரும் பெண் பார்க்கும் படலம் காமெடிதான். இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்த செய்தி வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘லால்சலாம்’ படத்தில், ரஜினிகாந்த் தற்போது நடந்து வரும் ‘ஜெய்லர்’ படத்தின் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story