திருக்கடையூர் அபிராமி கோவிலில் பிரபல காமெடி நடிகர் 'செந்தில்' குடும்பத்துடன் சாமிதரிசனம்.

photo

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகர் செந்தில். இவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி விழா கோலாகலமாக நடந்துள்ளது. இதனை தொடந்து இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களின்  வாழ்த்துகளை பெற்றுவருகிறது.

photo

கோலிவிட்டில் காமெடி நடிகர்கள் என்றால் சட்டென நினைவிற்கு முதலில் வருவது கவுண்டமணி, செந்தில் தான். சூப்பர் ஹிட் காம்போவாக வலம் வந்த இவர்களது காமெடிகள் இன்றும் சலிக்காமல் நம்மை சிரிக்கவைக்கிறது. காலம் கடந்தும் காரம் குறையாத இவர்களின் காமெடிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் தற்போதும் செந்தில் படங்களில் நடித்துவருகிறார். ஆனால் காமெடியனாக அல்ல கதையின் நாயகனாக. ஆம் இவர் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். மேலும் கிக் என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

photo

 இந்த நிலையில் செந்தில்  மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில், மனைவி கலைசெல்வி மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தாருடனும் 70வது வயது ஆரம்பத்திற்காக பீமரத சாந்தி  செய்துள்ளார். கஜபூஜை, கோபூஜை, முதல்கால யாகசாலை என பலவற்றில் செய்துள்ளனர். இது குறித்த தகவல் பரவியநிலையில் அங்கு வந்த ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டுள்ளார்.

Share this story