வரும் வெள்ளிக்கிழமை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா?-என்னென்ன படங்கள் தெரியுமா ?
வருகிற வெள்ளிக்கிழமை அதாவது ஜூலை 4ந் தேதி என்னென்ன தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
1.ஜூலை 4ந் தேதி ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவையானி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 3 பிஹெச்கே திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. . இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அம்ரித் இசையமைத்து உள்ளார்.
2.கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள் போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை இயக்கியவர் ராம். அவர் இயக்கத்தில் வருகிற ஜூலை 4ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் தான் பறந்து போ.
3.மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பீனிக்ஸ். இப்படத்தை அனல் அரசு இயக்கி உள்ளார். இப்படமும் வருகிற ஜூலை 4ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் நடிகை தேவ தர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது.
4.புதுமுக இயக்குனர் உதயா கே இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் அஃகேனம். இப்படத்தை அருண் பாண்டியன் தயாரித்துள்ளதோடு, தன்னுடைய மகளான கீர்த்தி பாண்டியனுடன் சேர்ந்து இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். . கிரைம் திரில்லர் படமான இது வருகிற ஜூலை 4ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
5.கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் உப்பு கப்புரம்பு. இப்படத்தை சசி இயக்கி உள்ளார். . இப்படம் நேரடியாக ஓடிடியில் ஜூலை 4ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

