‘லியோ’ பட டிரைலர் விவகாரம்: கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.

photo

‘லியோ’ படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆன நிலையில் அதில் நடிகர் விஜய் கெட்ட வர்த்தை பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில் லியோ படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

photo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘லியோ’ இந்தப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கவுதம் மேனன், பாபு ஆண்டனி என பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ளது.

அதன் ஒரு பகுதியாக படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் விஜய்  கெட்ட வார்த்தை பேசி நடித்திருந்தார்.ன் அதற்கு பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். குறிப்பாக சோசிய மீடியாவில் பெரும் பேசுபொருளானது. இந்த நிலையில் தற்போது டிரைலரில் உள்ள ஆபாச வார்த்தையை நீக்க கோரியும், படக்குழு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்து மக்கள் கழகம் சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Share this story