நெருங்கி வரும் ரிலீஸ் தேதி.. கோட் படத்திற்கு எதிராக சமூக ஆர்வலர் போலீசில் புகார்
1724931804218
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் கோட் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரி, சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும், திரையரங்குகளில் அனுமதியின்றி 6 காட்சிகள் திரையிடுவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.