சிம்பு நடிக்க கூடாது- ஐசரி கணேஷ் புகார்
கமல்- மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ’தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் சிம்பு மீது புகார் கொடுத்திருக்கிறார்.
முன்னதாக ஐசரி கணேஷ் கொரோனா குமார் படத்துக்காக சிம்புவுக்கு ரூ. 9.5 கோடி சம்பளம் பேசி, ரூ. 4.5 கோடி அட்வான்ஸ் கொடுத்துட்டார். ஆனால், சிம்பு ஐசரி படத்தில் நடித்துக் கொடுக்க நேரம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார் என முன்பே நீதிமன்றத்தை நாடியிருந்தார். ’நான் திருந்திவிட்டேன். நடிப்பில் இரண்டாவது இன்னிங்கிஸில் இறங்கி அடிக்கப் போகிறேன்’ என பேசிய சிம்பு மீண்டும் பழையபடி படத்தில் நடிக்க மெத்தனம் காட்டுவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இப்போது தயாரிப்பாளர் சங்கத்திலும் ஐசரி கணேஷ் கொடுத்துள்ள புகாரின் படி விசாரித்திருக்கிறார்கள். அதன்படி, வேல்ஸ் நிறுவனத்தோடு சிம்பு செய்திருந்த ஒப்பந்தம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என மறைமுகமாக அவருக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ‘தக் லைஃப்’ படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.