மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நடிகை பூஜா குமார் க்யூட் பதிவு..!

pooja kumari

நடிகை பூஜா குமார் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு, "காதல் ரோஜாவே" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா குமார், அதன் பின்னர் சில ஆங்கிலப் படங்களில் நடித்தார். இதையடுத்து கமல்ஹாசனின் "விஸ்வரூபம்" திரைப்படத்தின் மூலம் தமிழில் மறுபடியும் ரீஎன்ட்ரி ஆனார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்த பூஜா, "உத்தம வில்லன்" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதோடு, சில ஆங்கில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகை பூஜா குமார் அமெரிக்காவில் செட்டிலாகி, விஷால் ஜோஷியை திருமணம் செய்து கொண்டார்.

 

2020ஆம் ஆண்டு, இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில், தேசிய மகள் நாள் கொண்டாடப்பட்ட நிலையில், அதன் கொண்டாட்டத்தை பற்றிய தனது பதிவு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் மகிழ்ச்சியான தேசிய மகளிர் நாள் வாழ்த்துக்கள். குறிப்பாக மகளை பெற்றிருக்கும் அனைவருக்கும்! இந்த சிறிய அற்புதமான பெண்ணை பெற்றிருப்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, அவரை வளர்ப்பதில் இன்னும் மகிழ்ச்சி அடைகிறேன்! நான் உன்னை சந்திரனுக்கு அப்பாற்பட்ட அளவுக்கு நேசிக்கிறேன், வாழ்வின் விளையாட்டில் வெற்றி பெற உன் அனைத்து தேவைகளையும் நான் அளிக்க முடியுமாக!

Share this story