குவியும் வாழ்த்துக்கள்..!!நலிந்த நடிகர்களுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் யோகி பாபு ..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகி கால் பதித்து இன்று சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு . தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது ஏரளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
கடவுள் மீது அதீத பக்தி கொண்ட இவர் நிறைய தானம் வழங்கி வருகிறார் அதுமட்டுமின்றி ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகளையும் செய்து வருகிறார் . அந்தவகையில் தற்போது நலிந்த நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சங்கத்திற்கு ₹6 லட்சத்திற்கான காசோலையை நடிகர் யோகி பாபு வழங்கியுள்ளார்.
நலிந்த நடிகர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் நடிகர் சங்க அறக்கட்டளையின் உறுப்பினர் பூச்சி முருகனிடம் ₹6 லட்சத்திற்கான காசோலையை நடிகர் யோகி பாபு வழங்கியுள்ள நிலையில் அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.