ரசிகர்கள் அன்புக்கு நன்றி.. ‘கனெக்ட்’ வெற்றிக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா !

nayanthara

‘கனெக்ட்’ படத்தின் வெற்றிக்கு ரசிகர்கள் அன்புதான் காரணம் என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். 

'மாயா' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கிய திரைப்படம் 'கனெக்ட்'. நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை அவரின்  சொந்த நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மற்றும் சத்தியராஜ் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

nayanthara

ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவான இப்படம் கடந்த 22-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.  நயன்தாரா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்த படம் வெறும் 8 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

nayanthara

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கனெக்ட்’ படத்தை பார்த்து ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. அதேபோன்று உலக தரத்தில் படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கு நன்றி. என்னுடைய அன்பான தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது ரெளடி பிக்சர்ஸ் குழுவினருக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

Share this story